Header image alt text

பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில இன்று முற்பகல் கூடியது. பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

பாராளுமன்றத்திற்கு வருகை தரும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலயே பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். பாராளுமன்ற அமர்வு ஆரம்பமான போது, இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. Read more

உயர் நீதிமன்றம் மற்றும் ஏனைய நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்குகள் தொடர்பில் உரிய முறையில் அறிந்துகொள்ளாது கருத்து வெளியிடுவதில் இருந்து தவிர்ந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நடைபெற்ற ஊடக சந்திப்புகள் மற்றும் வேறு நிகழ்ச்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை அடிப்படையாக வைத்து இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஆட்சியதிகாரம் முக்கியமா அல்லது நாடு முக்கியமா என்பதை உடனடியாக தீர்மானிக்க வேண்டும்.

ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள இவர்கள் தொடர்ந்து சூழ்ச்சிகளை மேற்கொண்டால் பாரிய எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தற்போது நாடு பாரிய அரசியல் நெருக்கடியினை சர்வதேச அளவில் எதிர்கொண்டு வருகின்றது. அதற்கு தீர்வினை காண்பதை விடுத்து நாட்டு தலைவர் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவது முரணானது எனவும் தெரிவித்தார். Read more

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றுவந்த நிகழ்வில் சன நெரிசலில் சிக்குண்டு 14 பேர் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆலயத்தில் நடைபெற்று வந்த ஏகாதச ருத்ர வேள்வியின் இறுதி நாள் நிகழ்வில் இலட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். உலக நன்மைக்காகவும் நாட்டில் நீடித்த அமைதியும் சமாதானம் நிலவவும் மேற்படி ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை ஏகாதச ருத்ர வேள்வி ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. நேற்றைய தினம் இறுதி தினம் என்ற காரணத்தினால் நாட்டின் பல பாகங்களிலும இருந்து இலட்சக்கணக்கான அடியார்கள் பங்குகொண்டிருந்தனர். Read more