முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27ஆம் திகதி காலை 10 மணிக்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2008, 2009ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், பணி நிமித்தம் வெளிநாடு சென்றிருந்ததால், அவர் அங்கு ஆஜராகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.