வவுனியா – குருமன்காட்டுப் பகுதியில், ஒட்டோவில் பல ஆயுதங்களுடன் சென்ற இளைஞனை, நேற்றிரவு 8.30 மணியளவில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் துரத்திப்பிடித்து கைதுசெய்துள்ளனர்.

வவுனியா – தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா – குருமன்காட்டுப் பகுதியில், போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது வேகமாக வந்த ஓட்டோவை வழிமறித்த பொலிஸார், அந்த ஓட்டோ, பொலிஸாரின் சமிஞ்கையை பொருட்படுத்தாது சென்றுள்ளது. இதையடுத்து, ஓட்டோவைத் துரத்திச் சென்ற பொலிஸார், வவுனியா நகரப்பகுதியில் வைத்து, ஓட்டோவை மடக்கிப் பிடித்துள்ளனர். இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்ட ஓட்டோவை சோதனை செய்தபோது, கத்தி, கோடாரி, பைப் போன்றவற்றை பொலிஸார் கைப்பற்றியதுடன், ஓட்டோ சாரதியான குறித்த இளைஞனையும் கைதுசெய்துள்ளனர். குறித்த நபருக்கும் ஆவா குழுவுக்கும் இடையில் எவ்வித தொடர்புகளும் உள்ளதா என்ற கோணத்தில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.