பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றுகாலை அவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டியமை தொடர்பிலான வாக்குமூலம் ஒன்றை எடுப்பதற்காக பொலிஸ் மா அதிபரை இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.