யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலைய புனரமைப்பு வேலைகள் தொடர்பாக மேற்படி சனசமூக நிலையத்தின் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டதற்கமைய

புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் சனசமூக நிலையத்திற்கு இன்று நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதோடு, பூமகள் சனசமூக நிலையப் புனரமைப்பு வேலைகளுக்கான நிதியினை அடுத்த பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின்மூலம் ஒதுக்கித் தருவதாக தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினருடன் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் செல்வராஜா, அகீபன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.