யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி மேற்கு பொதுநோக்கு மண்டபத்தில் இன்றுமாலை 4மணியளவில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் தவநாயகம் அவர்களின் தலைமையில்; இடம்பெற்ற இக்கூட்டத்தில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோசன், உப தவிசாளர் கபிலன், வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் செல்வராஜா, அகீபன், வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினர் கெங்காதரன், கிராம அபிவிருத்திச் சங்க போசகர், சனசமூக நிலைய நிர்வாகிகள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், இளைஞர்கள், ஊர்ப்பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள் பற்றியும், அபிவிருத்தி பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டு தெளிவுபடுத்தல்களும் இடம்பெற்றிருந்தது.