மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அகழ்வு பணிகளில் ஈடுபட்டுவரும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார்.

பலத்த மழை காரணமாகவும் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றதாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பணிகள் இடை நிறுத்தப்படும் வரை 231 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார். இவற்றில் 18 சிறு குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு மீட்கப்பட்ட அனைத்து மனித எச்சங்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.