Header image alt text

ந.லெப்ரின்ராஜ்

ஜனநாயக ரீதியாக இருந்த அரசாங்கத்தை பலாத்காரமாக நீக்கிவிட்டு புதியதொரு அரசாங்கம் பலாத்காரமாக உருவாக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனநாயகம் மீறப்படுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரணில் விக்கிரமசிங்கவையோ மகிந்த ராஜபக்சவையோ நாங்கள் நம்பவில்லை. இவ்விருவரும் தமிழ் மக்களுக்கு நல்லதை செய்வார்கள் என்று நாங்கள் நம்பவில்லை அத்துடன் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நாசகார செயலை எதிர்க்காமல் பார்த்துக் கொண்டிருப்போமேயானால் சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய ஆபத்தான சூழலை உருவாக்கிவிடும் என்றும் தெரிவித்தார்.

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி : நாட்டில் தற்பொழுது நிலவும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு நாளையுடன் ஒரு மாதம் நிறைவடைய விருக்கிறது. ஆனால் இதுவரை ஒரு சுமுகமான நிலைமை உருவாகவில்லை. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? Read more

(திருமலை நவம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம், இராணுவத்தினர் வசம் இருக்கும் காணிகளும், வீடுகளும் விடுவிக்கப்படும், ஆனால் அரசியல் தீர்வு விடயத்தில் எம்மால் சடுதியாக எதுவும் செய்ய முடியாது என பாராளுமன்ற நாமல் ராஜபக்ச தன்னை சந்தித்து தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் சட்டபூர்வமானதா? அரசியல் சாசனத்துக்கு ஏற்பவா பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிவதற்காகவே 122 உறுப்பினர்களும் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம். நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தாவிட்டாலும் உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்றே ஆகவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாகவும் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாகவும் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்.
Read more

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் பொதுநலவாய அமைப்பின் விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை வரும் அவர் ஜனாதிபதி உட்பட அரசியல் கட்சியின் தலைவர்களை சந்தித்து உரையாடவுள்ளார். அத்துடன் அரசியல் நெருக்கடிகளை தீர்த்து வைக்கும் இராஜதந்திர முயற்சிகளிலும் ஈடுபடுவார் என இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

மக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டதாரியான இவர், இலங்கை திட்டமிடல் சேவை பிரிவின் முதல் தர அதிகாரியாவார்.

கடந்த 30 வருடங்களாக அரச சேவையில் அனுபவமிக்கவரான சுஜாதா துறைமுகங்கள் மற்றும் பெருற்தெருக்கள் அமைச்சின் செயலாளர், நிதியமைச்சின் திறைசேறி பிரதி செயலாளர்,வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார். அத்துடன் பல தனியார் மற்றும் அரச வங்கிகள், இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, காப்புறுதி சபை, இலங்கை முதலீட்டு சபை, இலங்கை சுற்றுலா சபை பணிப்பாளர் சபையின் உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

கொழும்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில், 8 சிறைச்சாலை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த 8 அதிகாரிகளும் கேகாலை சிறைச்சாலைக்கு இணையாக கடமையாற்றுபவர்களென சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.

சிறைக் காவலர், சார்ஜன்ட் உள்ளிட்ட 8 பேரே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 17ஆம் திகதி கேகாலை சிறைச்சாலையிலிருந்து 15 கைதிகள் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக சிறைச்சாலை பஸ் வண்டி மூலம் கொழும்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டப் போதே போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர் காணாமல் போயுள்ளார். Read more

கொழும்பு கொட்டாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொட்டாவ – ருக்மல்கம வீதியில் அதிவேக வீதியின் மேம்பாலத்திற்கு கீழ், நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஹபரகட வசந்த மற்றும் மீகொட உபுல் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் இருவர், அப்பகுதியில் நடமாடுவதாக கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more