கிளிநொச்சி ஸ்கந்தபுரம் இல.01 அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்று (28.11.2018) ஒலிபெருக்கி சாதனங்களை வழங்கிவைத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் பாராளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து இவை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்போது மேற்படி பாடசாலைக்கான ஒலிபெருக்கி சாதனங்களை பாடசாலை சமூகத்திடம் பாராளுமன்ற உறுப்பினர் கையளித்தார். இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் திருமதி ரஞ்சிதமலர் ரவிச்சந்திரன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் வாணி, ஆசிரியர்கள் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினர் வே.சிவபாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.