Header image alt text

ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை மீள அமைப்பதற்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதமொன்று இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறக்கூடியவர் என ஜனாதிபதி கருதும் நபரை பிரதமராக நியமிக்க வேண்டுமெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 26 ஆம் திகதியின் பின்னர் பாராளுமன்றம் பல தடவைகள் கூடிய போதிலும், பிரதமராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. Read more

ஜனநாயக நாடொன்றில் நாடாளுமன்றத்துக்கு இடம்பெறும் சம்பவங்கள் குறித்து, இளம் சமுதாயத்தினர் தற்போது கொண்டிருக்கும் எண்ணங்கள் மற்றும் கருத்துகள், இந்த முறைமையை நிராகரிக்கும் வகையிலேயே உள்ளதென்றும் இதனால், எதிர்காலம் குறித்து நாம் தீர்க்கமாக சிந்திக்க வேண்டுமென, ஜனாதிபதியால்,

உயர்க்கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் இன்று முற்பகல் ஆற்றிய உரையில் தெரிவித்தார். மஹிந்த தரப்பு எம்.பிக்கள், இன்றைய சபை அமர்வைப் புறக்கணித்துள்ள நிலையில், விஜேதாச ராஜபக்ஷ மாத்திரம் இன்று அமர்வில் கலந்துகொண்டு, மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more

பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 123 பேர் வாக்களித்தனர்.

பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவால் இன்று காலை பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டது. Read more

புத்தளம் நாத்தாண்டிய வலஹப்பிட்டிய பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி, நீரோடையில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பெண்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.