Header image alt text

அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை இன்று பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகள் கிடைத்ததாக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை பாட்டாளி சம்பிக்க ரணவக்கவினால் இன்று சமர்பிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த பிரேரணை மீதான விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. குறித்த இருவருக்கும் பொலிஸ் சார்ஜன்ட் ஆக பதவி உயர்வு வழங்க பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோர் இன்று மட்டக்களப்பு நோக்கி சென்றிருந்தனர். Read more