Header image alt text

மக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டதாரியான இவர், இலங்கை திட்டமிடல் சேவை பிரிவின் முதல் தர அதிகாரியாவார்.

கடந்த 30 வருடங்களாக அரச சேவையில் அனுபவமிக்கவரான சுஜாதா துறைமுகங்கள் மற்றும் பெருற்தெருக்கள் அமைச்சின் செயலாளர், நிதியமைச்சின் திறைசேறி பிரதி செயலாளர்,வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார். அத்துடன் பல தனியார் மற்றும் அரச வங்கிகள், இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, காப்புறுதி சபை, இலங்கை முதலீட்டு சபை, இலங்கை சுற்றுலா சபை பணிப்பாளர் சபையின் உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

கொழும்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில், 8 சிறைச்சாலை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த 8 அதிகாரிகளும் கேகாலை சிறைச்சாலைக்கு இணையாக கடமையாற்றுபவர்களென சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.

சிறைக் காவலர், சார்ஜன்ட் உள்ளிட்ட 8 பேரே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 17ஆம் திகதி கேகாலை சிறைச்சாலையிலிருந்து 15 கைதிகள் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக சிறைச்சாலை பஸ் வண்டி மூலம் கொழும்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டப் போதே போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர் காணாமல் போயுள்ளார். Read more

கொழும்பு கொட்டாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொட்டாவ – ருக்மல்கம வீதியில் அதிவேக வீதியின் மேம்பாலத்திற்கு கீழ், நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஹபரகட வசந்த மற்றும் மீகொட உபுல் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் இருவர், அப்பகுதியில் நடமாடுவதாக கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more

பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்த வழக்கை விசாரணை செய்வதற்கு ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் குழுவை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.

குறித்த இடைக்கால தடை உத்தரவு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை கடந்த 14 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் பிற்போடப்பட்டது. பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் குறித்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. Read more

அரசாங்க பாடசாலைகளுக்கான 3ஆம் தவணைக்கான விடுமுறை எதிர்வரும் 30ஆம் திகதி வழங்கப்படவுள்ள நிலையில், இன்னும் பாடசாலை மாணவர்களுக்கான புதிய புத்தகங்கள், சீருடைத் துணிகள் வழங்கும் நிகழ்வு நிறைவடையவில்லையென கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அடுத்தாண்டுக்காக 39714000 பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ள நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையால் அவற்றை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தாமதமாகியுள்ளது. Read more

யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலைய புனரமைப்பு வேலைகள் தொடர்பாக மேற்படி சனசமூக நிலையத்தின் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டதற்கமைய

புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் சனசமூக நிலையத்திற்கு இன்று நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதோடு, பூமகள் சனசமூக நிலையப் புனரமைப்பு வேலைகளுக்கான நிதியினை அடுத்த பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின்மூலம் ஒதுக்கித் தருவதாக தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினருடன் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் செல்வராஜா, அகீபன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
Read more

யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி மேற்கு பொதுநோக்கு மண்டபத்தில் இன்றுமாலை 4மணியளவில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் தவநாயகம் அவர்களின் தலைமையில்; இடம்பெற்ற இக்கூட்டத்தில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோசன், உப தவிசாளர் கபிலன், வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் செல்வராஜா, அகீபன், வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினர் கெங்காதரன், Read more

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றுகாலை அவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டியமை தொடர்பிலான வாக்குமூலம் ஒன்றை எடுப்பதற்காக பொலிஸ் மா அதிபரை இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு சூழ்நிலையிலும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகங்களக்கு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த தூர்மானம் தொடர்பில் தான் ஐக்கிய தேசிய கட்சிக்கு தெளிவுபடுத்தி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அகழ்வு பணிகளில் ஈடுபட்டுவரும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார்.

பலத்த மழை காரணமாகவும் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றதாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பணிகள் இடை நிறுத்தப்படும் வரை 231 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார். Read more