Header image alt text

யாழ். அச்செழு பிரதேச வீதி அபிவிருத்தி நடவடிக்கையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (30.12.2018)முற்பகல் இடம்பெற்றது. புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதேச மக்களைச் சந்தித்து கலந்துரையாடியதோடு அப்பகுதியிலுள்ள வீதிகளைப் பார்வையிட்டு அவற்றை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்தார். நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோசன், பிரதேசசபை உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, அகீபன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பகீரதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் முயற்சியால் கிடைக்கப்பெற்ற நிதியினூடு நேற்று (29.12.2018) முற்பகல் நீர்வேலி மேற்கில் அமைந்துள்ள மூன்று வீதிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
நீர்வேலி J/270 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட மாலைவீதி, பெரியவடலி வீதி-1 (தையிட்டி ஒழுங்கை), பெரியவடலி வீதி-2 ஆகிய மூன்று வீதிகளுக்கே 6மில்லியன் ரூபா செலவிலான மேற்படி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோசன், பிரதேசசபை உறுப்பினர்கள் இ.செல்வராஜா, தர்மலிங்கம்,
கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் சிவஞானசுந்தரம், சனசமூக நிலை ய தலைவர்கள் சுந்தரமூர்த்தி, சுவர்ணன், சமூக ஆர்வலர்கள். சந்திரன், நிர்மலா, நிசர்சன், திலீபன், முத்துக்குமார். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

நாகராசா(பொக்கன்) அவர்களின் தந்தை அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த நினைவை முன்னிட்டு(29.12.2018)இன்று பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு மத்திய குழு உறுப்பினர் மகேந்திரராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சர் கெளரவ.க.சிவநேசன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கெளரவ.ஜி.ரி.லிங்கநாதன், பிரதேச சபை உறுப்பினர்களான கெளரவ.குகதாசன், யோகராஜா,புளெட் மத்திய குழு உறுப்பினர் மணியன், மற்றும் பொது அமைப்புகளின் தலைவர்கள் பெற்றோர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

Read more

யாழ் கோப்பாய் கண்ணகி அம்மன் சனசமூகநிலைய மற்றும் ஸ்ரார் விளையாட்டு கழக இளைஞர்களால் சேகரிக்கப்பட்ட வெள்ள நிவாரணப்பொருட்கள் குறித்த இளைஞர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் வடமாகாண முன்னாள் அமைச்சர் க.சிவநேசன் வலி கிழக்கு பிரதேச்சபை உறுப்பினர் இ.செல்வராசா ஆகியோரால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகர் ம.பிரதீபன் கோம்பாவில் கிராம சேவகர் தேவகி ஆகியோரிடம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் வைத்து இன்று முற்பகல் கையளிக்கப்பட்டன இதனை தொடர்ந்து இப் பொருட்கள் கோம்பாவில் பகுதியால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. Read more

வவுனியா வடக்கு தமிழர் எல்லைக்கிராமமான காஞ்சிரமோட்டை கிராமத்தில் 18 குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை வவுனியா திருநாவற்குளம் மக்களின் ஆதரவுடன் கிராம அபிவிருத்திச் சங்கம், தமிழ் தேசிய இளைஞர் கழகம், நகர சபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம் மோகன், சுந்தரலிங்கம் காண்டீபன், ஆற்றலரசி நிலையம் ஆகியோரின் ஆதரவுடன் பொருட்கள் சேகரிக்கப்பட்டு 28/12/2018 அன்று மக்களிடம் கையளித்தார்கள். Read more

மேல் மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 720 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை மோசடி தொடர்பிலான விசாரணைகளையடுத்து, தெகிவளையைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரை கல்கிஸை நீதவான் முன்னிலையில் நாளை (27) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். Read more

முல்லைத்தீவின் பல பகுதிகளில் இன்றும் கடும் மழை பொழிவதாக தெரிவிக்கப்படுகின்றது. வடபகுதியில் பெய்த கடும்மழை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் பாதிப்புக்களை சந்தித்துள்ளதுடன்,

மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர். கடந்த இரு நாட்களாக நிலைமை சீராகி வந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் கடும்மழை பொழிந்து வருகின்றது.

யாழ்.மாவட்டத்தில் கையூட்டு பெற்ற கிராம சேவகரை உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்.மாவட்ட செயலர் நா.வேதநாயகன் பதவி இடைநீக்கம் செய்துள்ளார். யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பணியாற்றும் கிராம சேவகர் ஒருவரே அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

குறித்த கிராம சேவையாளர் பிரிவின் கீழ் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த குடும்பப்பெண் ஒருவருக்கு வீட்டு திட்ட பணிக்காக ஒரு இலட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு உள்ளது. அதில் தனக்கு 25ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்க வேண்டும் என கிராம சேவையாளர் குறித்த பெண்ணிடம் வற்புறுத்தி உள்ளார். Read more

நல்லெண்ண அடிப்படையில் இலங்கைக்கு வருகைத்தந்திருந்த, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல் தனது பயணத்தை நிறைவுத் செய்துக் கொண்டு திருப்பிச் சென்றுள்ளது.

குறித்த கப்பல் கடந்த 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டது. அதில் வருகைத்தந்திருந்த அமெரிக்க கடற்படையினர் மற்றும் கடற்படை அதிகாரிகள் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு, விஜயங்களை மேற்கொண்டிருந்தனர்.

சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் பதினான்கு வருடங்கள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலை காரணமாக இலங்கையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளின் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9.0 ரிச்டர் அளவில் பதிவாகியதுடன், இந்தப் பூமியதிர்ச்சி கடலில் நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் அசுர அலைகளை உருவாக்கியது. இலங்கையில் முதலில் கல்முனையைத் தாக்கிய பேரலை குறுகிய நேரத்திற்குள் திருமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உள்ளிட்ட 14 கரையோர மாவட்டங்களை தாக்கியது. Read more