Header image alt text

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பிரதேசத்தில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த யுத்த உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் முல்லைத்தீவு முகாமின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 2250 ரி56 ரக தோட்டாக்கள், ஆர்.பி.ஜி. தோட்டக்கள் 03, 06 ஆடி செல் உட்பட மேலும் பல அயுதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் கிளிநொச்சி முகாமில் உள்ள தேடுதல் மற்றும் குண்டு செயலிழப்பு பிரிவினரின் ஒத்துழைப்புடன் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில், பிரதமர் பதவியைத் தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நடத்திய உரையாடல்களின் போதும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, பிரதமர் பதவியைத் தற்போது தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் பிரதமரின் பதவியை ஏற்றுக்கொள்ளும் நோக்கம் இல்லை, ஆனால், எதிர்கால நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே.கவின் பிரதமர் வேட்பாளராகத் தான் இருக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். Read more

வவுனியா – புளியங்குளம், ஊஞ்சல்கட்டு பகுதியில், 8மாத சிசுவொன்று கொலைசெய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்றுக்காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குழந்தையை உறங்கச் செய்துவிட்டு தாயார் வெளியில் சென்று மீண்டும் வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் குழந்தை காணாமற் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் பின்னர், குழந்தை அருகிலுள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. பின் குழந்தை நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. Read more

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, வட்டகச்சி பிரதேசத்தில் வைத்து கிளிநொச்சி பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். வட்டகச்சி, கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளியும் மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான இராசநாயகம் சர்வானந்தம் என்ற 48 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். Read more

யோ.தர்மராஜ்-
பாராளுமன்றத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி புதன்கிழமை யார் பெரும்பான்மையை நிரூபிக்கின்றார்களோ அவர்களே ஆட்சியமைக்க தான் அனுமதி வழங்குவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடன் தனித் தனியாக பேச்சுவார்த்தையை நடத்தி தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு துரிதமாக தீர்வு காண்பதற்கு நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை நடத்திய சந்திப்பின்போது இணக்கம் தெரிவித்திருந்தார். Read more