Header image alt text

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்றுமாலை 4மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கூட்டமைப்பினரால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் உள்ள சட்ட ரீதியான விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி தரப்பில் எடுத்துக் கூறப்பட்டது. இதனையடுத்து இது சட்டரீதியாக பார்க்கப்பட வேண்டிய விடயமல்ல. இது ஒரு அரசியல் விடயமே. இதை நாம் நீண்ட காலமாகவே கூறிவருகின்றோம். Read more

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பிரதமர் மஹிந்த மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவைக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக அனுமதியில்லை என்றும், அவர்களின் நியமனங்களை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 தூதுவர்கள் மற்றும் 1 உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி மாளிகையில் வைத்து இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளனர்.

குரோஷியா, கானா, கொங்கோ மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்களே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு, Read more

வேலையற்ற பட்டதாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்திற்கு கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. லோட்டஸ் சுற்று வட்டப் பகுதியிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது இவ்வாறு கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலையற்ற பட்டதாரிகளின் குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இன்று சர்வதேச விசேட தேவையுடையோர் தினமாகும். இலங்கை மக்கள் தொகையில் 1.7 மில்லியன் பேர் விசேட தேவையுடையோர் என விசேட தேவையுடையோர் அமைப்பின் ஒருங்கிணைந்த முன்னணி தெரிவித்துள்ளது.

1996 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட விசேட தேவையுடையோருக்கான உரிமை சட்டம், இந்நாட்டில் 22 வருடங்களாக புதுப்பிக்கப்படவில்லை என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகின்றது. இன்று ஆரம்பமாகும் பரீட்சைகள் எதிர்வரும் 12ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இம்முறை பரீட்சை நிலையங்களுக்கு மேலதிக நிலையப் பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். காலை 8.30 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதால் 8 மணிக்கும் முன்னர் பரீட்சை நிலையங்களுக்கு பரீட்சார்திகள் வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். Read more

தனிமையில் வாழ்ந்து வந்த மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல், அங்கிருந்து தப்பித்து சென்ற நிலையில் படுகாயமடைந்து குருதி வெள்ளத்திலிருந்த மூதாட்டியை மீட்ட மகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்.

இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாணம் உடுவிலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எம் பொன்மலர் (வயது-72) என்ற மூதாட்டியே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலே மூதாட்டியைத் தாக்கினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த மூதாட்டியை அதிகாலையில் உணவு வழங்க சென்ற மகள் கண்ணுற்று அவசர இலக்கமான 119ற்கு அழைப்பினை மேற்கொண்டு உடனடியாக அம்யுலன்ஸின் உதவியுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர். Read more