Header image alt text

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வெளிநாடுகளில் பணிபுரிந்த 220 இலங்கைப் பணியாளர்கள் வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனரென வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதில் 52 பெண்கள் உள்ளடங்குவதுடன் 6 பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் பணியகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அத்துடன் உயிரிழந்த 220 பேரில் 145 பேர் இயற்கை காரணங்களால் உயிரிழந்திருப்பதுடன் 25 ஆண்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்திருக்கின்றனரென, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. மேலும் வாகன விபத்துகளால் 21 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர். Read more

முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்பு சபையின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

10 இலட்ச ரூபாய் சரீரப் பிணை இரண்டில் இவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எந்தவொரு முறையிலும் இது தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு தடையேற்படுத்த வேண்டாம் என்றும், தனது பதவியைப் பயன்படுத்தி சாட்சியாளர்களை அச்சுறுத்தல் விடுக்க வேண்டாம் என்றும் குறிப்பாக லெப்டினன் கமாண்டர் கலகமகே லக்சிறி என்ற அதிகாரிக்கு அச்சுறுத்தல் விடுக்க வேண்டாமெனவும் நீதவான் ரவீந்திரவுக்கு இதன்போது உத்தரவிட்டுள்ளார். Read more

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தரணிக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் ஒன்றினை பொலிசார் மீட்டுள்ளனர். நேற்று மாலை வீட்டில் இருந்த தனது மகனை நீண்டநேரமாக காணவில்லை என்று அவரது தாயார் எல்லா இடமும் தேடியுள்ளார்.

இதன் போதே கிணற்றினுள் சடலமாக இருந்தமை கண்டுபிடிக்கபட்டது. பின்னர் தகவல் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பொலிசாரால் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கபட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் செல்வம் வயது 40 என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.