Header image alt text

 யாழ்ப்பாணம் – கோப்பாய் மத்தி, கல்வியற்கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வாகனம், ஓட்டோ, மோட்டார் சைக்கிள் என்பன தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்தச் சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றது. செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது-53) என்பவரே, இவ்வாறு கையில் எரி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more

அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பல் யுஎஸ்எஸ் ஜோன்ஸ்டெனிஸ் இலங்கையில் தற்காலிக விநியோக தளமொன்றை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

கடலில் விநியோகங்கள், ஆதரவு மற்றும் ஏனைய சேவைகளை பெறுவதற்காகவே இந்த தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்க கடற்படை இலங்கையுடன் கடற்படை தொடர்பான ஒத்துழைப்புகள் அதிகரித்து வருவதை சாதகமாக பயன்படுத்தும் நோக்கில் இந்த விநியோக தளத்தை அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. Read more

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

டொலர்களுக்கு சமாதானத்தினை அழிக்காதே, வடக்கு கிழக்கின் அமைதியில் கை வைக்காதே, சமாதானத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டத்தினை நடைமுறைப்படுத்து, சமாதானத்தினை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒன்றுகூடுங்கள் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர். Read more

கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் 10 ஏக்கர் காணி நாளை விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அறிவித்தலுக்கமைய வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அதன் ஒரு கட்டமாக குறித்த காணி விடுவிக்கப்படவுள்ளன.

டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குள் பெரும்பான்மையான காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு- கிழக்கு அபிவிருத்தி செயலணியில் உறுதியளித்ததுடன், அது குறித்து அதிகாரிகளுக்கும் கட்டளையிட்டிருந்தார். Read more

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் நிலைமையினை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய ராஜாங்க அமைச்சர் மாக் ஃபீல்ட் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளை தொடர்ச்சியாக சந்தித்து இது குறித்து பிரித்தானியாவின் கவலை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். Read more

உலகம் முழுவதும் வீதி விபத்துகளில் ஆண்டுதோறும் 13.5 இலட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், உலகம் முழுவதும் வீதி விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

5 முதல் 29 வயது வரையான இளம் வயதினர் உயிரிழப்புகளுக்கு வீதி விபத்துகள்தான் முக்கிய காரணமாக விளங்குகின்றன. 2016 ஆம் ஆண்டு புள்ளிவிபரம்படி,வீதி விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 13.5 இலட்சமாக அதிகரித்துள்ளது. Read more