மன்னார் மனித புதைக்குழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களை அமெரிக்காவிற்கு பரிசோதனைக்கு அனுப்புவதில் நிதி சார்ந்த பிரச்சினை தோன்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் 117 நாட்களுக்கும் அதிகமாக மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கைளில் 200க்கும் அதிகமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் மாதிரிகளை அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி பரிசோதனைகளை மேற்கொள்ள முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வதில் தற்போது சிக்கல் நிலவுகிறது. இதனால் இந்த பணிகள் தாமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.