கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்த அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை கண்ணீர்ப் புகை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

மருதானை டெக்னிக்கல் சந்தியில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி, ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்ல முற்படுகையில், லோட்டஸ் வீதிக்கருகில் வைத்து பொலிஸார் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். ரஜரட்ட மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் மீதான ஒடுக்குமுறையை நிறுத்தக்கோரியே இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.