Header image alt text

இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள், நேற்று (21) பதவிப்பிராணம் செய்துகொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றன

இராஜாங்க அமைச்சர்கள்
ரஞ்சன் ராமநாயக்க – நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி
விஜயகலா மகேஸ்வரன் கல்வி
ஜே. சி. அலவத்துவள – உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிஎரான் விக்ரமரட்ன – நிதி Read more

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர். அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு,

ஹேமசிறி பெர்ணான்டோ – பாதுகாப்பு அமைச்சு
திருமதி எஸ்.எம்.மொஹமட் – தபால் சேவைகள், முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு
வீ.சிவஞானசோதி – தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு
பத்மசிறி ஜயமான்ன – கல்வி அமைச்சு Read more

9 மாகாணங்களுக்கும், எந்தவொர காலதாமதமும் இன்றி, ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அவர், நேற்று (21) தனது கடமைகளை, உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்ற பின்னரே, மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தெரிவித்த அவர், தேர்தல்களில் வெற்றிக்கொள்வதை நோக்காகக் கொண்டு, பொதுமக்களின் சொத்துகளை, துஷ்பிரயோகம் செய்து, ஒவ்வொரு மாகாணத்துக்கு ஒவ்வொரு நாள்களில் தேர்தல் நடத்தப்பட்டு வந்ததாக குற்றஞ்சாட்டிய அவர், இம்முறை, இக்கலாசாரம் மாற்றப்பட்டே தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறினார். Read more

கிளிநொச்சியில் நேற்றிரவு (21) முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அத்தோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி பாய்கின்றமையினால் வீதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சில கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட மக்களை இராணுவத்தினர் மீட்கும் பணிகளில் ஈடுப்பட்டதோடு, படகுகள் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக, பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்தநிலையில், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், கரைத்துரைப்பற்று ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான், மாங்குளம் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 300 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், பண்டாரவன்னி பகுதியிலுள்ள ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால், அப்பகுதியிலுள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. கேப்பாபிலவு – பிரம்படி பகுதியில் வீசிய பலத்த காற்றினால் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more