கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்களையடுத்து மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை வெள்ளம் காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் கிராமத்தில் வீடொன்றில் தங்கியிருந்த ஒருவர் மின்கசிவு காரணமாக மின்கசிவில் சிக்கி நேற்று முன்தினமிரவு (21-12-2018) உயிரிழந்துள்ளார். பெரியகுளம் கண்டாவளையை சேர்ந்த 56வயதான நல்லதம்பி திருச்செல்வம் என்பவரே உயிரிழந்துள்ளார். மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.