Header image alt text

வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்ளிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹட் சாலிஹீன் தெரிவித்தார்.

அதேபோல், மட்டக்களப்பு முதல் திருகோணமலை மற்றும் காங்சேன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக் கூடும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை அசாதாரண வானிலை காரணமாக, வடமாகாணத்தில் 22 ஆயிரத்து 823 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனை தெரிவித்துள்ளார். Read more

பொது போக்குவரத்து பஸ் கட்டணைகளை, 4 சதவீதத்தினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இந்த விலைக்குறைப்பு, 26ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்றார்.

இதேவேளை, தனியார் பஸ் சங்க உரிமையாளர்களுடனும் இந்த விவகாரம் தொடர்பில் நேற்றையதினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தீர்மானமொன்று எட்டப்பட்டது எனத் தெரிவித்த அமைச்சர், ஆரம்பக்கட்டணமான 12 ரூபாவில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை என்றும், அதற்கு அடுத்தக் கட்டணமான 15 ரூபாய், 14 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

இலங்கைக்கு சட்டவிரோதமாக 30 கிலோகிராம் கஞ்சாவை கொண்டுவர முயற்சி செய்த இலங்கை பிரஜைகள் இருவர் உட்பட நால்வர் தமிழ்நாடு – மதுரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நால்வரில் இருவர், இலங்கைப் பிரஜைகளென்றும், மற்றைய இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களென்றும் தெரிவித்தப் பொலிஸார், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட குறித்த கஞ்சாவின் இந்திய பெறுமதி 88 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவித்தனர். மேலும் குறித்த நபர்களிடமிருந்து மலேஷிய பணம் ஒரு தொகையும் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்குவதற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான பாடசாலை சீருடை மற்றும் சப்பாத்துக்கள் என்பவற்றுக்கான வவுச்சர்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.