Header image alt text

மேல் மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதன் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 720 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை மோசடி தொடர்பிலான விசாரணைகளையடுத்து, தெகிவளையைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரை கல்கிஸை நீதவான் முன்னிலையில் நாளை (27) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். Read more

முல்லைத்தீவின் பல பகுதிகளில் இன்றும் கடும் மழை பொழிவதாக தெரிவிக்கப்படுகின்றது. வடபகுதியில் பெய்த கடும்மழை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் பாதிப்புக்களை சந்தித்துள்ளதுடன்,

மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர். கடந்த இரு நாட்களாக நிலைமை சீராகி வந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் கடும்மழை பொழிந்து வருகின்றது.

யாழ்.மாவட்டத்தில் கையூட்டு பெற்ற கிராம சேவகரை உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்.மாவட்ட செயலர் நா.வேதநாயகன் பதவி இடைநீக்கம் செய்துள்ளார். யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பணியாற்றும் கிராம சேவகர் ஒருவரே அவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

குறித்த கிராம சேவையாளர் பிரிவின் கீழ் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த குடும்பப்பெண் ஒருவருக்கு வீட்டு திட்ட பணிக்காக ஒரு இலட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு உள்ளது. அதில் தனக்கு 25ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்க வேண்டும் என கிராம சேவையாளர் குறித்த பெண்ணிடம் வற்புறுத்தி உள்ளார். Read more

நல்லெண்ண அடிப்படையில் இலங்கைக்கு வருகைத்தந்திருந்த, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல் தனது பயணத்தை நிறைவுத் செய்துக் கொண்டு திருப்பிச் சென்றுள்ளது.

குறித்த கப்பல் கடந்த 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டது. அதில் வருகைத்தந்திருந்த அமெரிக்க கடற்படையினர் மற்றும் கடற்படை அதிகாரிகள் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு, விஜயங்களை மேற்கொண்டிருந்தனர்.

சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் பதினான்கு வருடங்கள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலை காரணமாக இலங்கையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளின் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9.0 ரிச்டர் அளவில் பதிவாகியதுடன், இந்தப் பூமியதிர்ச்சி கடலில் நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் அசுர அலைகளை உருவாக்கியது. இலங்கையில் முதலில் கல்முனையைத் தாக்கிய பேரலை குறுகிய நேரத்திற்குள் திருமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உள்ளிட்ட 14 கரையோர மாவட்டங்களை தாக்கியது. Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 597 குடும்பங்களைச் சேர்ந்த 41 ஆயிரத்து 317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளம் அனர்த்தம் காரணமாக 41 ஆயிரத்து 317 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலகம் நேற்றைய தினம்(25-12-2018 )வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 5885 பேர் 19 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கரைச்சி பிரதேசத்தில் 3142 குடும்பங்களைச் சேர்ந்த 103,39 பேரும், கண்டாவளையில் 7,635 குடும்பங்களைச் சேர்ந்த 24,820 பேரும் Read more