கிளிநொச்சி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 597 குடும்பங்களைச் சேர்ந்த 41 ஆயிரத்து 317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளம் அனர்த்தம் காரணமாக 41 ஆயிரத்து 317 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலகம் நேற்றைய தினம்(25-12-2018 )வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 5885 பேர் 19 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கரைச்சி பிரதேசத்தில் 3142 குடும்பங்களைச் சேர்ந்த 103,39 பேரும், கண்டாவளையில் 7,635 குடும்பங்களைச் சேர்ந்த 24,820 பேரும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 1819 குடும்பங்களைச் சேர்ந்த 6156 பேரும் பூநகரியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 23 வீடுகள் முழுமையாகவும், 314 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது எனவும் குறித்த புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.