வவுனியா வடக்கு தமிழர் எல்லைக்கிராமமான காஞ்சிரமோட்டை கிராமத்தில் 18 குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை வவுனியா திருநாவற்குளம் மக்களின் ஆதரவுடன் கிராம அபிவிருத்திச் சங்கம், தமிழ் தேசிய இளைஞர் கழகம், நகர சபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம் மோகன், சுந்தரலிங்கம் காண்டீபன், ஆற்றலரசி நிலையம் ஆகியோரின் ஆதரவுடன் பொருட்கள் சேகரிக்கப்பட்டு 28/12/2018 அன்று மக்களிடம் கையளித்தார்கள். இவ் நிவாரண பணியில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும் தற்போதைய நகர சபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன், நகர சபை உறுப்பினர் ஆசிரியர் சுந்தரலிங்கம் காண்டீபன் , திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சந்திரேஸ்வரன் ரவி மற்றும் பலர் கலந்துகொண்டு உதவிகளை மக்களிடம் கையளித்தார்கள்.