பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் முயற்சியால் கிடைக்கப்பெற்ற நிதியினூடு நேற்று (29.12.2018) முற்பகல் நீர்வேலி மேற்கில் அமைந்துள்ள மூன்று வீதிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
நீர்வேலி J/270 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட மாலைவீதி, பெரியவடலி வீதி-1 (தையிட்டி ஒழுங்கை), பெரியவடலி வீதி-2 ஆகிய மூன்று வீதிகளுக்கே 6மில்லியன் ரூபா செலவிலான மேற்படி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோசன், பிரதேசசபை உறுப்பினர்கள் இ.செல்வராஜா, தர்மலிங்கம்,
கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் சிவஞானசுந்தரம், சனசமூக நிலை ய தலைவர்கள் சுந்தரமூர்த்தி, சுவர்ணன், சமூக ஆர்வலர்கள். சந்திரன், நிர்மலா, நிசர்சன், திலீபன், முத்துக்குமார். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.