யாழ். அச்செழு பிரதேச வீதி அபிவிருத்தி நடவடிக்கையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (30.12.2018)முற்பகல் இடம்பெற்றது. புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதேச மக்களைச் சந்தித்து கலந்துரையாடியதோடு அப்பகுதியிலுள்ள வீதிகளைப் பார்வையிட்டு அவற்றை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்தார். நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோசன், பிரதேசசபை உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, அகீபன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பகீரதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். Read more