Header image alt text

கிளிநொச்சி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 597 குடும்பங்களைச் சேர்ந்த 41 ஆயிரத்து 317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளம் அனர்த்தம் காரணமாக 41 ஆயிரத்து 317 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலகம் நேற்றைய தினம்(25-12-2018 )வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 5885 பேர் 19 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கரைச்சி பிரதேசத்தில் 3142 குடும்பங்களைச் சேர்ந்த 103,39 பேரும், கண்டாவளையில் 7,635 குடும்பங்களைச் சேர்ந்த 24,820 பேரும் Read more

அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை, குடாவெல்ல மீன்பிடித்துறை முக பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சூட்டு சம்பவத்தில் காயமடைந்த 5பேரும் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் குழுக்கள் 11 உம் நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா நாடுகளுக்கிடையில் நல்லுறவை வலுப்படுத்திக் கொள்வதற்கும், நிலைபேறான அபிவிருத்தியுடைய உலகினை உருவாக்குவதற்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஷா அழைப்பு விடுத்துள்ளார்.

தென்னாபிரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மல்லிமாராட்சி தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோஷாவை ஜனாதிபதி விருந்தினர் இல்லத்தில் சந்தித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாழ்த்துக்களை தென்னாபிரிக்க ஜனாதிபதி ரமபோஷா மற்றும் தென்னாபிரிக்க மக்களுக்கு தெரியப்படுத்தியதுடன், Read more

வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்ளிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹட் சாலிஹீன் தெரிவித்தார்.

அதேபோல், மட்டக்களப்பு முதல் திருகோணமலை மற்றும் காங்சேன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக் கூடும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை அசாதாரண வானிலை காரணமாக, வடமாகாணத்தில் 22 ஆயிரத்து 823 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனை தெரிவித்துள்ளார். Read more

பொது போக்குவரத்து பஸ் கட்டணைகளை, 4 சதவீதத்தினால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இந்த விலைக்குறைப்பு, 26ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்றார்.

இதேவேளை, தனியார் பஸ் சங்க உரிமையாளர்களுடனும் இந்த விவகாரம் தொடர்பில் நேற்றையதினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தீர்மானமொன்று எட்டப்பட்டது எனத் தெரிவித்த அமைச்சர், ஆரம்பக்கட்டணமான 12 ரூபாவில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை என்றும், அதற்கு அடுத்தக் கட்டணமான 15 ரூபாய், 14 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

இலங்கைக்கு சட்டவிரோதமாக 30 கிலோகிராம் கஞ்சாவை கொண்டுவர முயற்சி செய்த இலங்கை பிரஜைகள் இருவர் உட்பட நால்வர் தமிழ்நாடு – மதுரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நால்வரில் இருவர், இலங்கைப் பிரஜைகளென்றும், மற்றைய இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களென்றும் தெரிவித்தப் பொலிஸார், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட குறித்த கஞ்சாவின் இந்திய பெறுமதி 88 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவித்தனர். மேலும் குறித்த நபர்களிடமிருந்து மலேஷிய பணம் ஒரு தொகையும் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்குவதற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான பாடசாலை சீருடை மற்றும் சப்பாத்துக்கள் என்பவற்றுக்கான வவுச்சர்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையின் ரஷ்யாவிற்கான தூதுவர் தயான் ஜயதிலக, ரஷ்யாவிற்கான சீன தூதுவர் லி ஹூயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கை மக்கள் சீனா தொடர்பில் கொண்டுள்ள உணர்வு பூர்வமான விடயங்களை இலங்கை தூதுவர், சீனத் தூதுவரிடம் தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்களுக்கு இடையில், அரசியல், பொருளாதாரம் போன்ற விடயங்கள்ரூnடிளி; குறித்த கருத்துக்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 36 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனார்ந்த முகாமைத்துவ நிலைய அதிகாரி தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை இரவு பெய்த கடும் மழையினால் மன்னார் மாவட்டம் தலைமன்னாரில் உள்ள மீள்குடியேற்ற கிராமமான ´பெல்வேறி´ கிராமத்தைச் சேர்ந்த 3 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தலைமன்னாரில் உள்ள பொது மண்டபம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். பெல்வேறி கிராமத்தைச் சேர்ந்த 36 குடும்பங்களின் 102 பேர் பாதிப்படைந்துள்ள நிலையில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 நபர்களே இடம்பெயர்ந்து பொது மண்டபத்தில் தஞ்சமடைந்துள்ளனர். Read more

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்களையடுத்து மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை வெள்ளம் காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் கிராமத்தில் வீடொன்றில் தங்கியிருந்த ஒருவர் மின்கசிவு காரணமாக மின்கசிவில் சிக்கி நேற்று முன்தினமிரவு (21-12-2018) உயிரிழந்துள்ளார். பெரியகுளம் கண்டாவளையை சேர்ந்த 56வயதான நல்லதம்பி திருச்செல்வம் என்பவரே உயிரிழந்துள்ளார். Read more