இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடிக்கு வெளிப்படையான ஜனநாயக ரீதியிலான தீர்வை காணவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. கண்டியில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது காணப்படுகின்ற அரசியல் நெருக்கடிகளிற்கு துரிததீர்வை காணலாம் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நெருக்கடிக்கு ஜனநாயகரீதியிலும் வெளிப்படை தன்மையுடனும் தீர்வை காணலாம் என அமெரிக்க தீர்வை குறிப்பிட்டுள்ளார். Read more
பிறந்த நாளுக்கு கேக் வாங்க சென்றவர் விபத்தில் உயிரிழந்த துயரச் சம்பவம் நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கிளிநொச்சி இரனைமடுகுளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் காப்பாற்றப்பட்டு மயிரிழையில் தப்பியுள்ளார்.
மன்னார் மனித புதைக்குழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களை அமெரிக்காவிற்கு பரிசோதனைக்கு அனுப்புவதில் நிதி சார்ந்த பிரச்சினை தோன்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பல் யுஎஸ்எஸ் ஜோன்ஸ்டெனிஸ் இலங்கையில் தற்காலிக விநியோக தளமொன்றை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் 10 ஏக்கர் காணி நாளை விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அறிவித்தலுக்கமைய வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அதன் ஒரு கட்டமாக குறித்த காணி விடுவிக்கப்படவுள்ளன.
இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் நிலைமையினை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் வீதி விபத்துகளில் ஆண்டுதோறும் 13.5 இலட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், உலகம் முழுவதும் வீதி விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.