Header image alt text

இரண்டு கால்களும் இரும்பு கம்பியால் இறுக கட்டப்பட்ட நிலையில் இரண்டு வித்தியாசமான மனித எச்சங்கள் மன்னார் மனித புதைகுழியிலிருந்து நேற்று (06) மீட்கப்பட்டுள்ளது. மன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணியானது 112 ஆவது நாளாக நேற்று சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.

இதுவரை மன்னார் மனித புதைகுழி தொடர்பான பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில் மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதுவரை நாட்களும் மனித புதைகுழி தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்டபோதும் குறித்த மனித புதைகுழியில் காணப்படும் மனித எலும்புக்கூடுகள் காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகளாக இருக்கலாமென காணமல் போன உறவுகளின் பெற்றோர் அச்சம் தெரிவித்திருந்தனர். Read more

இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டீ. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு ஏற்ப தற்போதைய பிரச்சினையை மிக விரைவில் இலங்கையின் அரசியல் தலைவர்கள் தீர்க்க வேண்டும் என டெய்லி குவு செய்திக்கு வழங்கிய செவ்வியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினையில் தமக்கு சார்பான எவரும் இல்லை எனவும் அமெரிக்கத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியலமைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மதிக்கும் சட்டப்பூர்வமான அரசாங்கம் உருவாவதை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஹெரோய்ன் கொக்கெய்ன், மோபின், அபின் ஆகிய போதை பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 96 பேருக்கு மரணத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நேற்று பொலிஸ் போதை பிரிவு அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் குறித்த மரணத்தண்டனை கைதிகளுள் 8 பெண்களும் உள்ளடங்குகின்றனர். மேலும் 275 பேருக்கு ஆயுட்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், இதில் 34 பெண்கள் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்தார். Read more

தோழர் நிசாந்தனின் இறுதி நிகழ்வில் சில…

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வெளிநாடுகளில் பணிபுரிந்த 220 இலங்கைப் பணியாளர்கள் வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனரென வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதில் 52 பெண்கள் உள்ளடங்குவதுடன் 6 பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் பணியகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அத்துடன் உயிரிழந்த 220 பேரில் 145 பேர் இயற்கை காரணங்களால் உயிரிழந்திருப்பதுடன் 25 ஆண்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்திருக்கின்றனரென, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. மேலும் வாகன விபத்துகளால் 21 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர். Read more

முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்பு சபையின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

10 இலட்ச ரூபாய் சரீரப் பிணை இரண்டில் இவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எந்தவொரு முறையிலும் இது தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு தடையேற்படுத்த வேண்டாம் என்றும், தனது பதவியைப் பயன்படுத்தி சாட்சியாளர்களை அச்சுறுத்தல் விடுக்க வேண்டாம் என்றும் குறிப்பாக லெப்டினன் கமாண்டர் கலகமகே லக்சிறி என்ற அதிகாரிக்கு அச்சுறுத்தல் விடுக்க வேண்டாமெனவும் நீதவான் ரவீந்திரவுக்கு இதன்போது உத்தரவிட்டுள்ளார். Read more

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தரணிக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் ஒன்றினை பொலிசார் மீட்டுள்ளனர். நேற்று மாலை வீட்டில் இருந்த தனது மகனை நீண்டநேரமாக காணவில்லை என்று அவரது தாயார் எல்லா இடமும் தேடியுள்ளார்.

இதன் போதே கிணற்றினுள் சடலமாக இருந்தமை கண்டுபிடிக்கபட்டது. பின்னர் தகவல் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பொலிசாரால் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கபட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் செல்வம் வயது 40 என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

விழிநீர் அஞ்சலி

Posted by plotenewseditor on 4 December 2018
Posted in செய்திகள் 

அமரர் பொன்னுத்துரை அசோகன் (தோழர் நிசாந்தன்)அவர்கள்-

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட பொன்னுத்துரை அசோகன் (நிசாந்தன்) அவர்கள் இன்று (04.12.2018) மரணமானார் என்பதை நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொண்டு, துயரந் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

குறிப்பு: அன்னாரின் பூதவுடல் வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்றிரவு 8மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்பதோடு, நாளை (05.12.2018) புதன்கிழமை பிற்பகல் இல்லத்தில் இடம்பெறும் கிரியைகளைக் தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக பிற்பகல் 3.00மணியளவில் கோயில்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. (தொடர்புகட்கு: 0776059681)

துயர் பகிர்வு

Posted by plotenewseditor on 4 December 2018
Posted in செய்திகள் 

அமரர் செல்லக்கண்டு நடராசா அவர்கள் (தோற்றம் 31.05.1933 மறைவு 04.12.2018)

யாழ். சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்வரும், தோழர் இளங்கோவின் (கெங்காதரன்) தந்தையாருமான செல்லக்கண்டு நடராசா அவர்கள் இன்றுகாலை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொண்டு, எமது அஞ்சலியினை காணிக்கையாக்குகின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

குறிப்பு: அன்னாரின் பூதவுடல் சுழிபுரம், நெல்லியான்வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக் கிரியைகளைத் தொடர்ந்து நாளை நண்பகல் 12மணியளவில் தகனக் கிரியைகளுக்கான திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். (தொடர்புகட்கு: இளங்கோ – 0771607393)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்றுமாலை 4மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கூட்டமைப்பினரால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் உள்ள சட்ட ரீதியான விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி தரப்பில் எடுத்துக் கூறப்பட்டது. இதனையடுத்து இது சட்டரீதியாக பார்க்கப்பட வேண்டிய விடயமல்ல. இது ஒரு அரசியல் விடயமே. இதை நாம் நீண்ட காலமாகவே கூறிவருகின்றோம். Read more