Header image alt text

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் இலண்டன் கிளை உறுப்பினரான திரு. பாலா அவர்கள் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களுடைய நினைவில்லத்திற்கு புல்வெட்டும் இயந்திரம் மற்றும் அதற்குரிய உபகரணங்களை அன்பளிப்பு செய்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள தோழர் பாலா அவர்கள் நேற்று (30.01.2019) புதன்கிழமை இவற்றை அன்பளிப்பு செய்துள்ளார்.
Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இனால் நடைமுறைப்படுத்தப்படும், புலம்பெயர்ந்து வாழும் தாயக உறவுகளினால், விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் இலண்டன் கிளை உறுப்பினரான திரு. தர்மலிங்கம் சிவபாலன் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்ட நிதியின் மூலம்,

ஒட்டுசுட்டான், முத்துவிநாயகபுரம் பகுதியில் இருந்து பேராதனை பல்கலைக்கழக கலைப்பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள யுத்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவருக்கு மாதாந்தம் ரூபா 5000/- உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவியையும், பெற்றோரையும் நேரில் சந்தித்த, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் பொருளாளரும், முன்னாள் வட மாகாணசபை விவசாய அமைச்சருமான கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் நிதியுதவியை வழங்கியிருந்தார்.

யா.விடத்தற்பளை கமலாசினி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டீ வித்தியாலய முதல்வர் நாகேந்திரன்; அவர்களின் தலைமையில் இன்று (28.01.2019) திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தென்மராட்சி உடற்கல்வி, வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் ந.ஸ்ரீகாந்தா அவர்களும் கௌரவ விருந்தினராக சாவகச்சேரி பிரதேசசபை உப-தவிசாளர் மயூரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

திருகோணமலை கிளிவெட்டியைப் பிறப்பிடமாகவும், பின்னாளில் டென்மார்க்கில் வசித்து வந்தவருமாகிய திரு. அருணாசலம் குமாரதுரை அவர்கள் இயற்கை எய்தியதையிட்டு ஆழந்த துயரும், வேதனையும் அடைகின்றோம்.

அன்னார், தமிழ் மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட தலைவரும் அனைவராலும் மதிக்கப்பட்டவருமான திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த அமரர் அருணாசலம் தங்கத்துரை அவர்களின் உடன்பிறந்த சகோதரர் ஆவார்.

மிகத் தீவிர தமிழ்த் தேசியவாதியாகவும், தமிழ்இனப் பற்றாளராகவும் திகழ்ந்த குமாரதுரை அண்ணர் அவரது துணிச்சல் மிக்க செயற்பாடுகளினால் மக்கள் மத்தியில் பெரிதும் மதிக்கப்பட்டவர். விடுதலைப்போராட்ட காலத்தில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்காளானதுடன் மூன்று வருடங்களுக்குமேல் சிறைவாசம் அனுபவித்திருந்தார். Read more

பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை அப்பதவியல் இருந்து அகற்றுமாறு ஜனாதிபதியை வலியுறுத்தி, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு விடுத்த அழைப்பினை ஏற்று இந்த ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்து அடைக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. Read more

யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் 300 பரப்புக் காணியை அரசாங்கம் சுவீரிப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் இன்று பெரும் எதிர்ப்பைத் தெரிவித்ததை தொடர்ந்து, நிலம் அளக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது.

இந்தப் பகுதியில் உள்ள 3000 ஏக்கர் காணி, அதாவது 300 பரப்புக் காணியை சுவீகரிக்கப் போவதாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தினால் காணி சுவீகரிப்பு நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. உரிமை கோரப்படாத காணியை சுவீரிக்கவுள்ளதால், காணி உரிமையாளர்கள் இருந்தால், உடனடியாக பிரதேச செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் சுவீகரிப்பு நோட்டிஸில் குறிப்பிடப்பட்டுள்ளமையினால், காணி உரிமையாளர்கள், காணி உரிமத்திற்குரிய ஆவணங்களைக் கொண்டு சென்றுள்ளனர். Read more

மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை இராணுவ வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று இலங்கை வீரர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இராணுவ வீரர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. மாலி நாட்டின் டொவ்ன்ஸா பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவ வாகனம் மீது ரிமோட் கன்ரோல் மூலம் இயங்கும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Read more

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமாஹ் யாகூபுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இன்றுகாலை இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேறகொண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று சிங்கப்பூர் நோக்கி பயணமானார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அடிப்படைச் சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகளின் தரத்தை உயர்த்துவதற்காக 200 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணங்கியுள்ளது.

உலக வங்கி சார்பில் உலக வங்கியின் இலங்கை வதிவிடப் பணிப்பாளர் ஹய்டா ஸ்வராய் மற்றும் இலங்கை நிதிமையச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஆகியோர் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த இணக்கபாட்டின் கீழ் இலங்கையின் அடிப்படைச் சுகாதார வசதிகளை மேம்படுத்தல், தொற்றா நோய்களை இனங்காணுதல் மற்றும் முகாமைத்துவம், மக்கள் தொகை மற்றும் மக்கள் தொகையில் கவனம் செலுத்தப்பட வேண்டிய பகுதியினருக்கு தேவைப்படும் சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல் என்பன முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித புதைகுழியில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் இன்றுகாலை மன்னார் நீதிமன்றத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்த அமெரிக்காவின் புளோரிடாவுக்கு கொண்டு செல்லும் வகையில் இன்று (23) காலை மன்னார் நீதிமன்றத்தில் இருந்து பொலிஸ் பாதுகாப்புடன் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. Read more