கிராம எழுச்சித்திட்டத்தின்கீழ் 2மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கோப்பாய் பிரதேச சபைக்கு உட்பட்ட ஊரெழு மேற்கு ஆலடி வீதி இன்று 01/01/2019 மாலை 4.00மணிக்கு புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால்
திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வுகள் சமூக ஆர்வலர் முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் அகீபன், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யுகறாஜ்,
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கவிதா, சமூக ஆர்வலர் வசந்தி மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.