புளெட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்
யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீ தூர்க்கா சனசமுக நிலையதில் பிரதேச மக்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் இ.கெங்காதரன் தலைமையில் 30/12/2018 மாலை இடம்பெற்ற இந் நிகழ்வில்
இன்றைய அரசியல் சூழ்நிலைகள்,அபிவிருத்திகள் மற்றும் இன்றைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. இதில் கலந்கொண்டிருந்த சமூக ஆர்வலர்களும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊர் பெரியோர்களும் தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.
அரசியல் தீர்வுத் திட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பது தொடர்பில் இதில் கலந்து கொண்டவர்கள் மிகவும் ஆர்வமாக கேட்டார்கள்.
இதன்போது தீர்வுத் திட்டம் கொண்டு வருவதில் உள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.