Header image alt text

ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பிற்பகல் பதவிப்பிரமாணம் செய்தனர்.

அவர்களது பெயர் விவரங்கள் பின்வருமாறு
1. மேல் மாகாணம் – அசாத் சாலி
2. மத்திய மாகாணம் – சத்தேந்திர மைத்ரி குணரத்ன
3. வடமத்திய மாகாணம் – சரத் ஏக்கநாயக்க
4. வடமேல் மாகாணம் – பேசல ஜயரத்ன பண்டார
5. கிழக்கு மாகாணம் – எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் இந்நிகழ்வில் பங்குபற்றினார். Read more

கொழும்பு கோட்டையிலிருந்து மாலபே வரையான குறுந்தூர ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கு, ஜப்பான் அரசாங்கம் கடனுதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

இதன்கீழ், 1,850 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலவும் வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் இந்தக் குறுந்தூர ரயில் மார்க்கத்தை அமைக்கும் நடவடிக்கைகள் இந்த வருடத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளன. Read more

வவுனியா, செட்டிகுளம், இராமியன்குளத்தில் மக்களின் காணிகளை கையகப்படுத்திய இராணுவத்தினர் விவசாயம் செய்து வருவதாகவும் அதனை உடன் விடுவிக்க கோரியும் பாரியளவிலான ஆர்ப்பாட்மொன்று இன்று இடம்பெற்றது.

வவுனியா, செட்டிகுளம், ஆண்டியாபுளியங்குளம் பள்ளிவாசல் முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மதவாச்சி மன்னார் வீதியில் ஆண்டியாபுளியங்குளத்தில் மதிய நேர தொழுகையின் பின்னர் சுமார் ஒரு மணிக்கு ஒன்றுகூடிய இஸ்லாமிய மக்கள் தமது பூர்வீக காணிகளை இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் என கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.
Read more

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, எதிர்க்கட்சித் தலைவராக ஏற்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மாநாட்டின் போது கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்க் கட்சிகளின் பிரதம கொறடாவாக, மஹிந்த அமரவீரவை ஏற்குமாறு அவர் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று நியமிக்கப்படவுள்ள நிலையில், தென் மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய மார்ஷல் பெரேரா, வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று, தகவல்கள் கசிந்துள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவித்தலுக்கமைய, அனைத்து மாகாண ஆளுநர்களும், தங்களது பதவி விலகல் கடிதங்களைக் கையளித்திருந்த நிலையில், மாகாணங்களுக்கான ஆளுநர் பதவிகள், வெற்றிடமாக இருந்து வருகின்றன. இந்நிலையிலேயே, இன்றைய தினம், புதிய ஆளுநர்களுக்கான நியமனங்கள் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more

ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவே என்று அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறியுள்ளார். அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் பொது மக்களின் எண்ணப்படி தெரிவு செய்யப்படுவார் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

எதிர்வரும் 14 மாதங்களில் பொருளாதாரத்தை பலப்படுத்தி, நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மன்னார் இலங்கை போக்குவரத்து சபை சாலை ஊழியர்கள் உட்பட வட மாகாணத்தில் உள்ள ஏழு சாலைகளின் ஊழியர்கள் இன்று காலை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிர்வாகத்திறமை அற்ற வட மாகாண பிராந்திய முகாமையாளரினால் இன்றைய காலத்தில் வட பிராந்திய சாலைகள் இழுத்து மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இயங்கி வருகின்றதாகவும், ஏற்கனவே இ.போ.ச சபையினர் ஆகிய தம்மால் எழுத்துமூலம் உயர் பீடங்களுக்கு அறிவித்துள்ள பத்து குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறாத காரணத்தினாலும், Read more

வவுனியா பொலிஸாருக்கு லஞ்சம் கொடுத்த இரு தனியார் நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் அதிவேகத்தினை கணிக்கும் கருவியுடனான பொலிஸ் உருவ பொம்மையொன்று வவுனியா ஏ9 வீதியில் வைக்கப்பட்டிருந்தது. அந்த உருவபொம்பைக்கு இலஞ்சம் வழங்குவது போன்று வீடியோ செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இரு ஊழியர்களை நேற்று முன்தினம் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆயர்படுத்தியுள்ளனர். Read more