நாங்கள் எதிர்க்கட்சிப் பதவி விவகாரத்தில் இப்போதே எவரொருவர் தொடர்பிலும், எவ்வித கருத்துக்களையும் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை.சேனாதிராஜா, இவ்விடயம் தொடர்பில் கலந்தாலோசித்து தீர்வு காண்பதற்கான கால அவகாசம் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மேலும் எதிர் கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எதிர்வரும் 8 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பதாக இடம்பெறும் எமது கட்சிக் கூட்டம், கட்சித் தலைவர் கூட்டம் என்பவற்றில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுப்போம் எனவும் தெரிவித்தார்.