இரட்டை குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தை ஆக்கிரமித்து செயற்பட்டுள்ளது. இரட்டை குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு செயற்பட்டிருந்தனர். தங்களது இரட்டை குடியுரிமை விவகாரத்தை மூடி மறைப்பதற்கு அவர்களால் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுவதாக சிசிர ஜெயகொடி குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலையில், அவர்களது இரட்டை குடியுரிமை தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்வதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்த நடவடிக்கைக்காக சுயாதீன தொழிற்துறையினர் மற்றும் சட்டத்தரணிகள் குழுக்கள் என்பன இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ்த தேசியக் கூட்டமைப்பின் தமக்கு தெரிந்தவரை இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள எவரும் இல்லை என அதன் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.