இலங்கையின் தேசிய நலன் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை அடைந்து கொள்வதற்கு உதவும் வகையிலான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு பூரண ஆதரவை வழங்குவதுடன், அனைத்து விதங்களிலும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் ஐந்து மாணவர்களின் படுகொலை இடம்பெற்று கடந்த 2 ஆம் திகதியுடன் 13 வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ள நிலையில், இன்னமும் இவ்விவகாரம் தொடர்பிலான குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயராகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.