Header image alt text

புலம்பெயர்ந்து வாழும் தாயக உறவுகளினால், விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் கிளைத் தோழர்களினால் அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து முதற்கட்டமாக, இரு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஐவருக்கு துவிச்சக்கர வண்டிகளும், மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மூன்றுசக்கர வண்டி ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இத் திட்டத்தின் கீழ், அளவெட்டி அருணாசலா வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி பயிலும் பத்மநாதன் கம்சிகா என்ற மாணவிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஊடாகவும், கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையில் தரம் 8ல் கல்வி பயிலும் ஜூட் குணசீலன் சுலக்சன் என்ற மாணவனுக்கு வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர் சண்முகலிங்கம் சஜீவன் ஊடாகவும், மேலும் மூவருக்கு தொழில்சார் ஊக்குவிப்புக்காக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஊடாக தலா ஒவ்வொரு துவிச்சக்கர வண்டியும் வழங்கிவைக்கப்பட்டன. மேலும், கந்தரோடையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான சச்சிதானந்தன் ரமேஸ்வரன் என்பவருக்கு மூன்றுசக்கர சைக்கிளும் பாராளுமன்ற உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ஊடாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
Read more

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன், ஸ்கந்தபுரம் கிராமத்தில் 05.01.2019 சனிக்கிழமை காலை 9மணியளவில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

லண்டனில் வசிக்கும் தர்மலிங்கம் நாகராஜா (பொக்கன்) அவர்கள் தனது தந்தையாரான கந்தையா தர்மலிங்கம் அவர்களின் நினைவாக இதற்கான நிதியுதவியினை வழங்கியிருந்தார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஆதரவாளர் நேசன் அவர்களின் இல்லத்தில் அக்கராயன் கிராம சேவையாளர் சபாரத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது 55 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினர்கள் வே. சிவபாலசுப்பிரமணியம், க.மகேந்திரன், கட்சி உறுப்பினர் சந்திரன், மகளீர் சங்கத் தலைவி சாந்தி, இளைஞர்கள், பெற்றோர்கள், பயன்பெறும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
Read more

மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. அதன்படி ஊவா மாகாண ஆளுனராக ரஜித் கீர்த்தி தென்னகோனும் சப்ரகமுவ மாகாண ஆளுனராக சிரேஷ்ட பேராசிரியர் தம்ம திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வடக்கு மாகாண ஆளுனராக டொக்டர் சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். Read more

யாழ். வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சபேசன் அவர்களது கோரிக்கைக்கு அமைவாக புளொட் தலைவைரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் 2018ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் சபேசன் அவர்களின் வட்டாரத்தில் அமைந்திருக்கும் மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயத்திற்கு 45000/-பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரமும், மல்லாகம் வீரபத்திரர் ஆலயத்திற்கு 65000/-பெறுமதியான ஒலிபெருக்கி சாதனமும் (06.01.2019) வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன் 2019ஆம் ஆண்டுக்கான பசுமைப் புரட்சி திட்டத்தின்கீழ இரு வருடங்களில் பயன்தரக்கூடிய 200 மாங்கன்றுகள் முதல்கட்டமாக இன்றையதினம் மல்லாகம் நீலியம்பனைப் பிள்ளையார் ஆலய முன்றலில் வைத்து அந்த வட்டாரத்தைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது. Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுடனான விசேட சந்திப்பு (05.01.2019) சனிக்கிழமை மாலை 4.30க்கு புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், கட்சியின் மூத்த உறுப்பினர் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யுகறாஜ், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன் மற்றும் உள்ளூட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். Read more

இன்று மேலும் 4 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனப்படையில் சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் தெற்கு ஆகிய மாகாணங்களுக்கான ஆளுனர்கள் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய கடந்த வாரம் அனைத்து ஆளுனர்களும் பதவி விலகி இருந்தனர். அதனடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை மேல், மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான ஆளுனர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். எனவே இன்றைய தினம் மீதமாக உள்ள ஏனைய 4 மாகாணங்களுக்கான ஆளுனர்கள் நியமிக்கப்பட உள்ளனர். Read more

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை நேற்று கொழும்பில் சந்தித்தார்.

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் உறுப்பினரை தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன், அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தின் முக்கியத்துவத்தினை சுட்டிக் காட்டிய அதேவேளை இந்த அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தினால் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பேணப்பட்டுள்ளமையானது கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் மூலம் நிரூபணமாகியுள்ளமையையும் எடுத்துக்காட்டினார். Read more

வெளிநாட்டு வர்த்தகர் சிலர் இலங்கைக்கு வருகைத் தந்த தனியாருக்குச் சொந்தமான விமானமொன்று உரிய முறையிலன்று நாட்டை விட்டுச் சென்றுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யவுள்ளதாக போக்குவரத்து சிவில் விமானசேவைகள் அமைச்சுத் தெரிவிக்கின்றது.

கடந்த 3ஆம் திகதி கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த குறித்த விமானத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த இருவர், சீனாவைச் சேர்ந்த 3 வர்த்தகர்கள் என ஐவர் வந்திறங்கியதுடன், பின்னர் இவர்கள் குறித்த விமானத்திலேயே திருகோணமலையிலுள்ள சீன துறைமுகத்தின் இராணுவ முகாம் விமானப் பாதையில் தரையிறங்கியுள்ளனர். Read more