ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுடனான விசேட சந்திப்பு (05.01.2019) சனிக்கிழமை மாலை 4.30க்கு புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், கட்சியின் மூத்த உறுப்பினர் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யுகறாஜ், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன் மற்றும் உள்ளூட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். இக்கூட்டத்தின்போது இன்றைய அரசியல் விவகாரங்கள் மற்றும் கிராம எழுச்சி அபிவிருத்தி திட்டம், உறுப்பினர்களின் எதிர்கால வேலைத்திட்டங்கள் என்பன தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.