புலம்பெயர்ந்து வாழும் தாயக உறவுகளினால், விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் கிளைத் தோழர்களினால் அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து முதற்கட்டமாக, இரு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஐவருக்கு துவிச்சக்கர வண்டிகளும், மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மூன்றுசக்கர வண்டி ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இத் திட்டத்தின் கீழ், அளவெட்டி அருணாசலா வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி பயிலும் பத்மநாதன் கம்சிகா என்ற மாணவிக்கு பாராளுமன்ற உறுப்பினரும் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஊடாகவும், கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையில் தரம் 8ல் கல்வி பயிலும் ஜூட் குணசீலன் சுலக்சன் என்ற மாணவனுக்கு வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர் சண்முகலிங்கம் சஜீவன் ஊடாகவும், மேலும் மூவருக்கு தொழில்சார் ஊக்குவிப்புக்காக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஊடாக தலா ஒவ்வொரு துவிச்சக்கர வண்டியும் வழங்கிவைக்கப்பட்டன. மேலும், கந்தரோடையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான சச்சிதானந்தன் ரமேஸ்வரன் என்பவருக்கு மூன்றுசக்கர சைக்கிளும் பாராளுமன்ற உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ஊடாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.