யாழ். வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சபேசன் அவர்களது கோரிக்கைக்கு அமைவாக புளொட் தலைவைரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் 2018ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் சபேசன் அவர்களின் வட்டாரத்தில் அமைந்திருக்கும் மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயத்திற்கு 45000/-பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரமும், மல்லாகம் வீரபத்திரர் ஆலயத்திற்கு 65000/-பெறுமதியான ஒலிபெருக்கி சாதனமும் (06.01.2019) வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன் 2019ஆம் ஆண்டுக்கான பசுமைப் புரட்சி திட்டத்தின்கீழ இரு வருடங்களில் பயன்தரக்கூடிய 200 மாங்கன்றுகள் முதல்கட்டமாக இன்றையதினம் மல்லாகம் நீலியம்பனைப் பிள்ளையார் ஆலய முன்றலில் வைத்து அந்த வட்டாரத்தைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிவடக்கு பிரதேசசபை தவிசாளர் சுகிர்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யுகராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.