கண்டி யட்டிநுவர வீதியில் ஐந்துமாடி கட்டடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த கட்டடத்தில் சிறுவர்கள் முதல் சிலர் இருந்ததாகவும் எனினும் அவர்கள் சிறுகாயங்களுடன் காப்பற்றப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், தற்பொழுது தீயணைப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டதாக கூறியுள்ளனர்.

குறித்த கட்டடத்தின் மூன்றாவது மாடியிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதோடு, பிரதேசவாசிகள் மற்றும் தீயணைப்பு பிரிவினரின் உதவியோடு தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். குறித்த தீ விபத்தில் காமநாதன் ராமராஜா (வயது 36), தங்கவேலு ராதிகா (வயது 32), காமநாதன் நிசாலன் (வயது 08), காமநாதன் சத்யஜித் (வயது 07), மற்றும் காமநாதன் சஹித்தியன் (வயது 03) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.