Header image alt text

புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் 2018ஆம் ஆண்டிற்கான தனது விசேட நிதி ஒதுக்கீட்டில் நவாலி வடக்கு J/134 கிராம அலுவலர் பகுதியிலுள்ள குடத்தனைவீதி புனரமைப்புப் பணிகளை 06.01.2018 ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.

இதன்போது 2019ஆம் ஆண்டுக்கான பசுமைப் புரட்சி திட்டத்தின்கீழ் இரு வருடங்களில் பயன்தரக்கூடிய 100 மாங்கன்றுகள் முதல் கட்டமாக நவாலி மருதடி விநாயகர் சனசமூக நிலைய முன்றலில் வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன், வலி தென்மேற்கு பிரதேசசபை தவிசாளர் ஜெபநேசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யுகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Read more

கிளிநொச்சி 155ம் கட்டை மூந்நூறு ஏக்கர் திட்டம் பகுதியில் நேற்று முன்தினம் கிணற்று மண் சரிந்ததால் கிணற்றுக்குள் தவறி விழுந்து புவனேஸ்வரன் டிலானி என்ற சிறுமி உயிரிழந்தார்.

அவரது இறுதி நிகழ்வுகள் இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்றிருந்தது. சிறுமியினுடைய இல்லத்திற்கு இன்று (09.01.2019) சென்றிருந்த ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினர் வே.சிவபாலசுப்பிரமணியம் அவர்கள் சிறுமியின் பெற்றோர்க்கு ஆறுதல் கூறியதோடு, லண்டனில் வசிக்கும் தர்மலிங்கம் நாகராஜா (பொக்கன்) அவர்களால் வழங்கப்பட்ட சிறுதொகை நிதியுதவியையும் கையளித்திருந்தார்.
Read more

வலிதெற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட 9ம் வட்டார மக்களுக்கும் புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 07.01.2019 திங்கட்கிழமை மாலை 7மணியளவில் யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள நாடளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில நடைபெற்றது.

இச் சந்திப்பில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் 9ம் வட்டார உறுப்பினர் திருமதி. யோகாதேவி, நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யுகறாஜ் ஆகியோரும், சனசமூக நிலைய பிரதிநிதிகள், இளைஞர் கழகத்தினர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாதர் சங்கத்தினர், மயான அபிவிருத்தி சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். Read more

இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவு பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது.

வீர விக்ரம பதக்கம், ரண விக்ரம பதக்கம், உன்னத சேவைக்கான பதக்கம் ஆகிய பதக்கங்களைப் பெற்றுள்ள சவேந்திர சில்வா 1984ஆம் ஆண்டு கெடெட் அதிகாரியாக சேவையில் இணைந்துகொண்டிருந்தார். அவர் இலங்கை இராணுவத்தின் 53 வது படைப் பிரிவு பிரதானியாக நியமனம் பெற்றுள்ளார்.