வலிதெற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட 9ம் வட்டார மக்களுக்கும் புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 07.01.2019 திங்கட்கிழமை மாலை 7மணியளவில் யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள நாடளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில நடைபெற்றது.

இச் சந்திப்பில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் 9ம் வட்டார உறுப்பினர் திருமதி. யோகாதேவி, நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யுகறாஜ் ஆகியோரும், சனசமூக நிலைய பிரதிநிதிகள், இளைஞர் கழகத்தினர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாதர் சங்கத்தினர், மயான அபிவிருத்தி சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.க்கூட்டத்தின்போது இன்றைய அரசியல் விவகாரங்கள், கிராம எழுச்சி அபிவிருத்தி திட்டம், உறுப்பினர்களின் எதிர்கால வேலைத்திட்டங்கள் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.