முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில் இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கு நில அளவீடு செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த பகுதியில் உள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணி அளவீடு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அளம்பில் சந்தியில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மக்களின் எதிர்ப்பை அடுத்து நில அளவீட்டு அதிகாரிகள் திரும்பிச் சென்றுள்ளனர்.