Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)ஆரம்பகால உறுப்பினராக இருந்து வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட சரசாலையைச் சேர்ந்த தோழர் ஜெயமுகுந்தனின் சகோதரியின் நிலைமையைக் கருத்திற்கொண்டு, சுவிஸ் நாட்டைச் சேர்ந்த புளொட் உறுப்பினர் செல்வபாலனின் (லெனின்) நிதிப்பங்களிப்பில் வாழ்வாதார உதவியாக பசுமாடு ஒன்று இன்று (13.01.2019) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி பிரதேச சபையின் உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தார்கள்.
Read more

துயர் பகிர்கின்றோம்!

Posted by plotenewseditor on 13 January 2019
Posted in செய்திகள் 

வைத்தியக்கலாநிதி இராஜதுரை தர்மராஜா அவர்கள் நேற்று (12.01.2019) காலை கொழும்பில் காலமானர் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். 

அன்னார் பொதுவுடமைவாதியும், காந்தீயம் அமைப்பின் செயலரும், ஆசிரியரும், கழகத்தின் மூத்த தளபதியும், கழகத்தின் திருமலை மாவட்ட அமைப்பாளருமான அமரர் தோழர் ஜெயச்சந்திரன் (பார்த்தன்) அவர்களின் சகோதரராவார். அவர்தம் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், நட்புக்கள், உறவுகளோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொண்டு, துயரந் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

குறிப்பு: அன்னாரின் பூதவுடல் இன்றுகாலை 10மணிமுதல் கொழும்பு கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதோடு, அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நாளை மாலை 4மணிக்கு இடம்பெற்று தகனக் கிரியைகளுக்காக கல்கிசை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. தொடர்புகட்கு (மகன் முரளி 0710694930).

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 2015 ஜனவரி 8ம் திகதி கொள்கைகளிற்கு தான் துரோகமிழைக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தலைமைத்துவத்தை வழங்குமாறு ஜனாதிபதியை முன்னாள் ஜனாதிபதி அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்புடன் கூட்டுச்சேரும் சிறிசேனவின் முடிவை தான் ஆதரிக்கவில்லை எனவும் சந்திரிகா தெரிவித்துள்ளார். Read more