Header image alt text

குரும்பசிட்டி கிராமத்தில் வாழும் மக்களினதும் குரும்பசிட்டியிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரதிநிதிகளினதும் ஒன்றுகூடல் நிகழ்வொன்று தைப்பொங்கல் தினத்தில்(15-01-2019) குரும்பசிட்டியிலுள்ள ஆ.சி. நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றபோது புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தனும் கலந்துகொண்டார்.

புலம்பெயர்ந்து வாழும் குரும்பசிட்டி மக்களின் தாராள நிதியுதவியுடனும் தற்போது குரும்பசிட்டியில் வாழும் மக்களின் உழைப்புடனும் குரும்பசிட்டி கிராமம் மீண்டும் மிடுக்குடன் தலைநிமிர்வதாக பெருமிதம் கொண்ட கிராம மக்கள் மேலும் கல்வி, உட்கட்டுமானம் என்பவற்றின் அபிவிருத்திக்கு புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தியபோது, Read more

யாழ்ப்பாணம் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழா நிகழ்வுகள் தைப்பொங்கல் தினமான இன்று (15.01.2019) இளவாலையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான பொம்மலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என்பவற்றோடு சறுக்குமரமேறுதல், கயிறிழுத்தல் மற்றும் சிறுவர்கள்கள், பெண்களுக்கான கிராமிய விளையாட்டுக்கள் பலவும் இடம்பெற்றிருந்தன. மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் இடம்பெற்ற இந் நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். Read more

(எஸ்.நிதர்ஷன்)
 
சமகால அரசியல் நிலைமைகள் அதிலும் அரசமைப்பு உருவாக்க பணிகள் தொடர்பில் யாழ்ப்பாணம் கந்தரோடையிலுள்ள இல்லத்தில் (04.01.2019) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
 
இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். அங்கு அவர் தெரிவித்தவை வருமாறு, அரசியல் தீர்வு சம்பந்தமாக 2015 ஆம் ஆண்டு தொடக்கம் செயற்பாடுகள் நடந்து கொண்டு வருகின்றன.

Read more

வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்மைப்புத் திட்டத்தில், முதல் கட்டமாக, 4,750 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிகப்படவுள்ளதாக, தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும், இந்த வீடுகள் 550 சதுரஅடி பரப்பளவில் அமையவுள்ளதாகவும் இவற்றுக்கான கொடுப்பனவுகள் கட்டம் கட்டமாக வேலைகளின் அடிப்படையில் பயனாளிகளுக்கு வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

பூஜை வழிபாடுகளில் ஈடுபட கோவிலுக்கு வந்த இளைஞர்கள்மீது, வாள்வெட்டு குழு தாக்குதல் மேற்கொண்ட சம்பவமொன்று, யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியில், இன்றுகாலை இடம்பெற்றுள்ளது.

தைப்பொங்கல் தினமான இன்றைய தினம் நாச்சிமார் கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிலையில், கோவிலுக்கு அருகில் சில இளைஞர்கள் கூடி நின்றபோது, அப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாள் வெட்டுக்குழுவினர், இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளது. Read more

வவுனியா, புதூர் பகுதியில் பிஸ்டல் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவரும் புளியங்குளம் பொலிசார் இச் சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.

கடந்த 2 ஆம் திகதி புளியங்குளம், புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாட்டம் காணப்படுவதாக புளியங்குளம் பொலிசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு சிவில் உடையில் நான்கு பொலிசார் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். Read more

யாழ். பருத்தித்துறை – கற்கோவளத்தில் இளைஞர் ஒருவரை அடித்துப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் இருவரை பருத்தித்துறை பொலிஸார், நேற்று இரவு கைதுசெய்துள்ளனர்.

வடமராட்சி, பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த வாசுதேவன் அமல்கரன் (வயது 22) எனும் இளைஞன் அடித்துக்கொலை செய்யப்பட்டிருந்தார். சடலமாக மீட்கப்பட்ட நபர் வீட்டிற்கு சற்று தொலைவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்ததாகவும், அப்போது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், Read more

வவனியாவில் சுழற்சி முறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தைப்பொங்கலை முன்னிட்டு, இன்று கவனயீர்ப்பு ஊர்வலத்தை முன்னெடுத்ததுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

வவனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அங்கிருந்து கடை வீதி வழியாக ஊர்வலத்தை ஆரம்பித்து, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தளத்தை அடைந்தனர். பின்னர், அங்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக வவுனியா கந்தசாமி கோவிலுக்கு சென்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கு வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், Read more

வவுனியா இரட்டைப்பெரியகுளம் குளத்தில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று பகல் 6 மாணவர்கள் குறித்த குளத்தில் நீராடச் சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குளத்தில் இருந்த கல் ஒன்றின் மீது ஏறியபோது வழுக்கி விழுந்ததிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா, வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த 14 இற்கும் 15 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஒரு சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் பிரதேசவாசிகள் தொடர்ந்தும் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதம் ´உத்தரதேவி´ என்ற பெயருடன் இரண்டாவது பரீட்சார்த்த பயணமாக கொழும்பில் இருந்து புறப்பட்டு காங்கேசன்துறையை சென்றடைந்துள்ளது.

கொழும்பில் இருந்து நேற்றுக் காலை 7.15 மணி அளவில் தனது இரண்டாவது பரீட்சார்த்த பயணத்தை ஆரம்பித்த உத்தரதேவி பிற்பகல் 2.30மணியளவில் யாழ். காங்கேசன்துறையை சென்றடைந்துள்ளது. இந்த பரீட்சார்த்தப் பயணத்தில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், புகையிரத நிலைய அதிகாரிகள், இந்திய அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் எனப் பலரும் பயணம் மேற்கொண்டிருந்தனர்.