இணுவில் அறிவாலயத்தின் 14வது ஆண்டுவிழா நிகழ்வு இன்று இடம்பெற்றபோது அறிவாலயத்தின் நூல்நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ள பகுதியானது செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் மண்டபம் என நாமமிடப்பட்டுள்ளது. இப்பகுதி நூல்நிலையமாக மாற்றப்படுவதற்கான நிதி உதவிகளை பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனும் தங்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடாக வழங்கியிருந்தமை இந் நிகழ்வின்போது சுட்டிக்காட்டப்பட்டது. அறிவாலயத்தின் தற்போதைய தலைவர் எஸ்.சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலாநிதி ஆறுதிருமுருகன், யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், பேராசிரியர் தேவராஜா உட்பட கிராமத்தின் கல்விமான்கள், பெரியோர் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.