யாழ். கைதடி குருசாமி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று (18.01.2019) வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30மணிளவில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய முதல்வர் நா.ஜெயபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் முதன்மை விருந்தினராக புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி பிரதேச சபையின் உபதலைவர் மயூரன், இலங்கையர் வாசுதேவன் (ஓய்வுநிலை உதவிச் செயலாளர், திட்டமிடல், சுகாதார அமைச்சு, மத்திய மாகாணம்) செல்வி அ.நிருபராணி (உதவிக் கோட்டக்கல்வி பணிப்பாளர், விஞ்ஞானம், தென்மராட்சி கல்வி வலயம், ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து இறைவணக்கம், கோடியேற்றல் என்பன இடம்பெற்று ஒலிம்பிக் தீபமேற்றலுடன் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின. விருந்தினர் உரை மற்றும் பரிசில் வழங்கலுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.