நெடுங்கேணி மாமடு சந்தி (முல்லைதீவு மாவட்டம்) வெள்ளை பிள்ளையார் ஆலய கற்பக அறநெறி பாடசாலையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு (20.01.2019) இன்று ஆலய பரிபாலன சபையின் தலைவர் திரு .S சுபாஸ்கரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திருமதி .சாந்தி ஸ்ரீகந்தராஜா ,கௌரவ .DR .சிவமோகன் ,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி .ரி .லிங்கநாதன் , பிரதேச சபை உறுப்பினர் திரு .சத்தியசீலன் ,ஒட்டிசுட்டான் செயலக கலாச்சார உத்தியோகத்தர் திரு .மோகன் ,அறநெறி பாடசாலையின் ஒருங்கிணைப்பாளர் திரு . சுகந்தன் , ஆலய பரிபாலன சபையின் பொருளாளரும் ,காப்பாளருமான திரு .தர்மலிங்கம் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள் ,அறநெறி பாடசாலையின் ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் ,ஊடகவியலாளர்கள் ,மாணவர்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் .மேலும் இந்நிகழ்வின் போது அறநெறி பாடசாலையின் ஆசிரியர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டதோடு அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.